Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீ நேமி-அபய் கிளினிக் மற்றும் உதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

ஜனவரி 20, 2019 01:31

சென்னை: ஸ்ரீ நேமி-அபய் கிளினிக், லேப் உடன் இணைந்து ஆழ்வார்பேட்டை உதி கண் மருத்துவமனை 71வது இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. செளகார்பேட்டை நம்மாழ்வார் தெருவில் உள்ள மாங்கி கன்வர் அன்ராஜ் சேர்டியா ஜெயின்  நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 20ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.  

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்றனர். மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பெற வேண்டியவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சர்க்கரை பரிசோதனை இருதயம் மற்றும் இசிஜி மற்றும் தகுந்த சான்றிதழை தங்கள் மருத்துவரிடமிருந்து பெற்று வர வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் விபரங்களை 93810 47035, 94444 61543, 98407 70643 என்ற எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று முகாமில் சிகிச்சைக்கு வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.  


 

தலைப்புச்செய்திகள்