Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் இனி காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை: ஜெகதீஷ் ஷெட்டர்

ஜுன் 10, 2020 10:13

உப்பள்ளி : நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை. ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை என்று தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் கூறியுள்ளார்.

தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை. ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டது அவர்களது உட்கட்சி விவகாரம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. போலி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிப்போம். போலி விதைகளை வாங்கி பயன்படுத்திய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்