Sunday, 9th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொற்றை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த அஸ்லம் பாபா கொரோனாவுக்கு பலி

ஜுன் 13, 2020 06:41

போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனாவை குணப்படுத்துவதாக அருள்வாக்கு கூறி பக்தர்கள் கையில் முத்த வைத்தியம் செய்த சாமியார் அதே கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் வாங்கிய பக்தர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் , கொரோனாவை தாம் குணப்படுத்துவதாக கூறி, தன்னை சந்திக்க வந்த பக்தர்களுக்கு கையில் முத்தம் வைத்தியம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி அஸ்லம் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு நபர் அஸ்லம்பாபாவிடம் முத்தம் வாங்கி சென்று கொரோனாவை பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் முத்தல் பெற்ற 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்