Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.3 லட்சமாக உயர்வு: 9,520 பேர் பலி

ஜுன் 15, 2020 06:28

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சமாக அதிகரித்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 9,520 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 798 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி

மஹாராஷ்டிரா - 1,07,958- 3,950

தமிழகம்- 44,661435

டில்லி -41,182-1,327

குஜராத்-23,544-1,477

உ.பி.,-13,615-399

ராஜஸ்தான்-12,694-292

மேற்கு வங்கம்- 11,087-475

ம.பி.,-10,802-459

ஹரியானா-7,208-88

கர்நாடகா-7,000-86

பீஹார்-6,470-39

ஆந்திரா -6,163-84

காஷ்மீர்-5,041-59

தெலுங்கானா-4,974-185

அசாம்-4,049-08

ஒடிசா-3,909-11

பஞ்சாப் 3,140-67

கேரளா-2,461-19

உத்தர்காண்ட்-1,819-24

ஜார்க்கண்ட்-1,745-08

சத்தீஸ்கர்-1,662-08

திரிபுரா-1,076-01

கோவா-564-0

லடாக்-549-01

ஹிமாச்சல பிரதேசம்-518-07

மணிப்பூர்-458-0

சண்டிகர்-352-05

புதுச்சேரி-194-5

நாகலாந்து-168-0

மிசோரம்-112-0

தலைப்புச்செய்திகள்