Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய ராணுவத்துடன் மோதல்: சீன உயர் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

ஜுன் 17, 2020 07:15

லடாக்: லடாக்கில் கல்வான் பகுதியில் இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 40க்கும் மேற்பட்ட சீனர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் 15 நள்ளிரவில் நடந்த கைகலப்பில், சீனாவுக்கு அதிக பாதிப்பு இருக்கலாம். சீன தரப்பில் அதிகளவு ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெச்சர்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் அந்நாட்டிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
எத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என உறுதியாக கூற முடியாது. அதேநேரத்தில், இந்த எண்ணிக்கை 40 ஐ தாண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மோதலில் சீன தரப்பின் ராணுவத்தின் கமாண்டிங் அலுவலரும் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனிடையே, இந்த மோதலில் 35 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அந்நாட்டு நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
 

தலைப்புச்செய்திகள்