Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷிக்கு அழைப்பு

ஜுலை 22, 2020 06:06

அயோத்தி,: உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் ராம ஜன்ம பூமி தீர்த்த ஷே த்திரா அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்துள்ளதாவது, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்