Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் புதிதாக 885 பேருக்கு கொரோனா தொற்று

ஜுலை 25, 2020 06:21

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக ஒரே நாளில் 885 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,995 ஆனது, நேற்று ஒரே நாளில் 4 பேர் மேலும் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 54 ஆனது.தற்போது கேரளாவில் 9,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 7,564 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இன்று ஜூலை 24ம் தேதி மட்டும் 968 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 64 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 68 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்துள்ளனர். 724 பேருக்கு கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்ததன் மூலம் பரவி உள்ளது. அதில் 56 பேருக்கு நோய் யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டறிய முடியவில்லை.

நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 167 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 133 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 106 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 29 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 23 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 15 பேருக்கும் தொற்று புதிதாக ஏற்பட்டது.

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,160 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் மொத்தம் 1,56,767 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,47,470 பேர் வீடுகளிலும், 9,297 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இதுவரை 453 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. உலக நாடுகளில் கொரோனா மரண விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கேரளாவில் வெறும் 0.33 சதவீதமாக உள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்