Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்யாணமா.. கேட்டால் அதிர்ச்சியா இருக்கு: பீதியில் இருந்து மீளாத நடிகை!

ஜுலை 25, 2020 06:51

சென்னை: திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது என்று பிரபல நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். 

தமிழில் பூர்ணா என்ற பெயரில் நடித்து வருபவர் மலையாள நடிகை ஷாம்னா காசிம். இவரின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

பூர்ணாவை திருமணம் செய்வதாக பழகிய ஒரு கும்பல், பிறகு பணம் கேட்டு மிரட்டி வருவதாகக் கூறியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பலரை இப்படி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. ஒரு நெட்வொர்க் அமைத்து அவர்கள் இந்த செயலை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை பூர்ணா, எனக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் பெண் கேட்டனர். அவர்கள் கொடுத்த முகவரி, பெயர் அனைத்தும் போலி என்பது தெரிந்ததும் புகார் கொடுத்தோம். மோசடி புகாரில் சிக்கி பெண்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது' என்று கூறியிருந்தார்.

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நடிகை பூர்ணா, தற்போது திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 'திருமணம் ஒவ்வொரு பெண்ணுக்குமே மகிழ்ச்சியை தரக்கூடியது. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், இப்படி ஒரு மோசடி கும்பல் வரும் என்று நினைக்கவே இல்லை. என் குடும்பத்தினர் என்னை தைரியமாக இருக்கும்படி கூறி வருகின்றனர்.

ஒரு மோசடி கும்பலைப் பிடித்துக் கொடுத்ததற்கு நான் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சிதான். இந்த விஷயத்தில் நடிகை அம்பிகா உட்பட சினிமா துறையினர் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர். இது எனக்கு பலத்தை அளிக்கிறது. இருந்தாலும் இனி யாரையும் என்னால் நம்ப முடியுமா என்பது சந்தேகம்தான். சில நேரங்களில் கதறி அழுதுவிடுகிறேன்.

என் மனதில் உள்ள பாரத்தைப் போக்க ஒரு நடன நிகழ்ச்சி நடத்த வேண்டும் என நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். நடிகை பூரணா, தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஷாம்னா காசிம் என்ற பெயரில் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஜோசப் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். 

தலைப்புச்செய்திகள்