Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் ஊழல் நடந்துள்ளது: பா.ஜ., தலைவர் நட்டா குற்றச்சாட்டு

ஜுலை 27, 2020 07:33

புதுடெல்லி: காங்., ஆட்சியின் போது, பாதுகாப்பு துறையில் ஊழல் நடைபெற்றதால், ராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கார்கில் போரின் 21ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, நேற்று அவர் பேசியதாவது: நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். உயரமான மலைப்பகுதியில் நடந்த கார்கில் போரில், இக்கட்டான நேரத்திலும் மன உறுதியுடன் போராடிய இந்திய வீரர்கள், பாக்.,ஐ வீழ்த்தினர். அவர்களுக்கு நாடே கடன்பட்டுள்ளது.

2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஜ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில், பாதுகாப்பு துறையில் ஊழல் நிலவியதால், ராணுவ தளவாடங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், தற்போது 36 ரபேல் விமானங்கள், 28 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சீனாவுடனான மோதல் விவகாரத்திலும், லடாக் சென்று ராணுவ வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். நம்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்க ஒருபோதும் மோடி விடமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்