Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2025க்கு பின் பாகிஸ்தான் இருக்காது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மார்ச் 18, 2019 07:02

மும்பை: வரும், 2025ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்திருக்கும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறினார். 2025க்கு பின் ,பாக்., இருக்காது,ஆர்.எஸ்.எஸ்.,, தலைவர் பேச்சு 

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கனவு நனவாகும் 

தலைநகர் மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்,  
இந்திரேஷ் குமார் பேசியதாவது:நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. 1947 வரை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான், பாகிஸ்தான் இருந்தது.ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு எதிராக, முதல் முறையாக, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அது, நம், 'அகண்ட பாரதம்' என்ற கனவை நனவாக்க, வழி வகுத்துள்ளது.  

ஏனெனில், முன்பிருந்த அரசுகளுக்கு இல்லாத அரசியல் உறுதி, இப்போதுள்ள அரசுக்கு உள்ளது. 
அதனால், 2025ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருக்கும். நாம் அனைவரும், லாகூர்,கராச்சியில் சொத்து வாங்கலாம். மானசரோவர், கைலாசம் செல்வதற்கு, சீனாவின் அனுமதியை நாட வேண்டிய அவசியமில்லை; லாகூர் வழியாக செல்லலாம். 

வங்கதேசத்தில், நமக்கு சாதகமான அரசு இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு பின், ஐரோப்பிய யூனியன் போல், பாரதிய யூனியன் என்ற அமைப்பு  

உருவாகும்.ஒரு தேசத்தில், அரசியல் சட்டம், கொடி, குடிமக்கள் உரிமை ஆகியவை, ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும். தேசத்துக்கு விரோதமாக பேசுவோர், செயல் படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும். அதன் பின், ஹமீத் அன்சாரி, நவ்ஜோத் சிங் சித்து போன்றவர்கள், தேசத்துக்கு விரோதமாக, ஒரு போதும் பேச மாட்டார்கள்.இவ்வாறு அவர் பேசினார். 
 

தலைப்புச்செய்திகள்