Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

செப்டம்பர் 04, 2020 07:40

சென்னை: ''தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்,''  என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி முதல் ரயில் சேவைகளை மாநிலத்துக்குள் இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனை ஏற்று செப்டம்பர் 7ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. சென்னை- கோயம்புத்தூர் இடையே 3 சிறப்பு ரயில்கள், சென்னை மதுரை இடையே 2 சிறப்பு ரயில்கள், சென்னை- திருச்சி; கோவை- மயிலாடுதுறை; சென்னை- காரைக்குடி; சென்னை- தூத்துக்குடி இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.

ரயில்கள் விவரம் வருமாறு:

1) சென்னை சென்ட்ரல் - கோவை- சென்னை சூப்பர்பாஸ்ட் இண்டர்சிட்டி (T. No. 02675/02676)

2) கோவை- மயிலாடுதுறை- கோவை- ஜன்சதாப்தி (செவ்வாய் தவிர) (Train No. 02084/02083)

3) சென்னை சென்ட்ரல்- கோவை- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (தினந்தோறும்) (Train No. 02679/02680)

4) சென்னை சென்ட்ரல்- கோவை- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (தினந்தோறும்( (Train No. 02673/02674)

5) சென்னை எழும்பூர்- திருச்சி- சென்னை எழும்பூர் (Tr.No: 06795/06796)

6) சென்னை எழும்பூர்- காரைக்குடி- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (T. No. 02605/02606)

7) சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (Train No. 02635 / 02636)

8) சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (Train No. 02637/02638)

9) சென்னை எழும்பூர்- தூத்துக்குடி- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (T. No. 02693/02694)

இதற்கான முன்பதிவு நாளை முதல் துவங்குகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்