Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரியல்எஸ்டேட் தொழில் நடத்தி வந்தவர் படப்பை அருகே சரமாரி வெட்டி கொலை

அக்டோபர் 05, 2020 07:17

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் படப்பை அருகே ரியல்எஸ்டேட் தொழில் நடத்தி வந்தவர் காரில் வந்த போது மர்ம கும்பல் அவரை சரமாரி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே உள்ள ஒரத்தூர் மேம்பாலத்தில் மணிமங்கலம் காந்திநகர் ஒன்பதாவது தெருவில் வசித்து வரும் சதீஷ் வயது 32 என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து சதீஷை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் சதீஷ் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சதீஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

இவர் காரில் செங்கல்பட்டு சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் ஒரத்தூர் மேம்பாலம் அருகில் பின்தொடர்ந்து வந்த ஐ20 காரில் வந்தவர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். உன்னோடு பேச வேண்டுமென்று பாலத்திற்கு மேல் அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைப்பார்த்த சதீஷின் டிரைவர் ராம் காரை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்

மேலும் கொலைக்கு யார் காரணம்? தொழில் போட்டியா? அல்லது முன் விரோதமா? என்று பல கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்