Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்: தஞ்சை காவல்துறையினர் ஏற்பாடு

அக்டோபர் 05, 2020 10:37

தஞ்சாவூர்: தஞ்சையில் காவல் துறையினர் தலைக்கவசத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது
திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராமன் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூரில் தலைக்கவசம், முகக் கவசம், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல் துறையினர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஜெயச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மேரீஸ் கார்னர், ரயிலடி, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, திலகர் திடல் பகுதி வழியாகச் சென்ற இப்பேரணி பெரியகோயில் அருகே முடிவடைந்தது.

இதில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் முக கவசம், தலைக்கவசம், கையுறைகள் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


 

தலைப்புச்செய்திகள்