Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதையில் கார் ஓட்டியதில் விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய வாலிபர்: இருவர் அதிரடி கைது

அக்டோபர் 06, 2020 06:36

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இனோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் என்ற இடத்தில் வரும்போது கார் ஓட்டிய ஓட்டுனர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் பறந்து சென்று அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலையில் பலத்த காயங்களுடனும், மற்றொருவர் சிறிய காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் பயணித்த ஓட்டுனர் கல்பாக்கத்தை சேர்ந்த மோகன்குமார் வயது40. வழக்கறிஞர்கள் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் வயது 30, செங்கல்பட்டு காரணை புதுச்சேரியைச் சேர்ந்த ராஜரத்தினம் உள்ளிட்ட மூவரும் உச்சக்கட்ட மதுபோதையில் இருந்ததும் காரை ஓட்ட இயலாத நிலையில் விபத்து நடந்துள்ளதாகவும்,  அதிர்ஷ்டவசமாக கார் பறந்து எதிர் திசையில் சென்றபோது அதிக வாகன ஓட்டிகள் பயணிக்காதது நல்வாய்பாக அமைந்தது.

காரில் பயணித்த ஒருவர் வழக்கறிஞர் என கூறிய நிலையில் காரில் காவல்துறையினர் என முன்பக்க பலகை  வைத்துள்ளது எதற்காக எனவும், இதுபோன்று பல துறை சார்ந்தவர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிக்கவும் இது போன்ற வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, காவல்துறை இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கில் தற்போது 2 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்