Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க.வில் இனிமேல் தான் தர்மயுத்தம்: தங்கத்தமிழ்ச்செல்வன் உறுதி

அக்டோபர் 08, 2020 09:41

தேனி: ''அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இனி தான் அ.தி.மு.க.வில் மோதல் தொடங்கப் போகிறது,''  என்று தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் தி.மு.க. மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான தங்கதமிழ்செல்வன் கூறினார். தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். இடையே ஏற்பட்ட விவதாம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். ஆகிய இருவருடனும் திடீர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் முதல்வர்  வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தி.மு.க. மாநில கொள்கை பரப்புச் செயலாளரும் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்ததாவது:

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டதால் பிரச்சினை தீர்ந்து விடவில்லை. பிரச்சினையே இனிமேல்தான் தொடங்கப் போகிறது. இனி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸூம் ஓ.பி.எஸ்.ஸூக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமியும் வேலை பார்க்க தொடங்குவார்கள். ஆகவே இனி மேல்தான் அ.தி.மு.க.வில் தர்மயுத்தம் தொடங்கப் போகிறது.
இவ்வாறு தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்