Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜா.க வில் 102 புதியவர்களுக்கு வாய்ப்பு

மார்ச் 25, 2019 06:26

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ.சார்பில் போட்டியிட 102 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் புதிய வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வின் மூத்த தலைவர்களான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் லோக்சபா சபாநாயகர் சுமித்ராமகாஜன் , உமாபாரதி ஆகியோர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர்.இந்நிலையில் 102 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 2014-ம் ஆண்டுதேர்ந்தெடுக்கப்பட்ட சத்ருகன் சின்ஹாவிற்கு இந்த முறை வாய்ப்பு வழங்க்கப்படவில்லை. அதே சமயம் அவரது தொகுதியான பாட்னாசாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். வாஜ்பாய் அரசில் இடம் பெற்ற ஷா நவாஸ் ஹூசேன் 2014-ல் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போதும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 

மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களை பொறுத்தவரையில் தற்போதைய எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஓடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த அபராஜிதா சாரங்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ., வில் இணைந்தார். அவருக்கு புவனேஸ்வர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஜூ ஜனதா தள கட்சியை சேர்ந்த கந்தமால் தொகுதி வேட்பாளர் பிரதியுஷா ராஜேஸ்வரி சிங் பா.ஜ.,வில் இணைந்தார். அவர் பிரதமர் மோடியின் செயல்பாடு என்னை ஈர்த்ததால் பா.ஜ.,வில் இணைந்தேன் என்றார். 

கர்நாடக மாநிலத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான அம்பரிஷ் மனைவி சுமலதா சுயேட்சையாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் மறுத்தது. இதனை அடுத்து அவருக்கு பா.ஜ.,ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது . 

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த சர்சசை நடந்தது.இதில் பெண்களை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை சென்ற சுரேந்திரனுக்கு பத்தனம் திட்டா தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்