Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகாரில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: சட்டசபை தேர்தல் நாளில் திடீர் பரபரப்பு 

அக்டோபர் 28, 2020 08:50

பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நேற்று  அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் இரண்டு வெடிகுண்டுகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) கைப்பற்றி பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க வைத்தனர். இது மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக நேற்று புதன்கிழமை காலை 7 மணிக்கு 16 மாவட்டங்களில் அடங்கியுள்ள, 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு  தொடங்கியது. ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 42 பேர், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த 35 பேர், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் 29 பேர், காங்கிரசில் இருந்து 21 பேர், இடதுசாரிகளை சேர்ந்தவர்கள் 8 பேர் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநில தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவோயிஸ்ட்கள் அதிகம் நிறைந்த அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்