Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா? -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

நவம்பர் 22, 2020 10:08

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்போம். எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள். தைத்திங்கள் நேரடியாக பிரச்சாரம் தொடங்குகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்