Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி மக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம் - உள்துறை அமைச்சகம்

நவம்பர் 24, 2020 06:31

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 75.44 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். புதிய நோய்த்தொற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேசமயம் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 
 
கொரோனா வைரசுக்கான பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்படும். பிசிஆர் பரிசோதனை கட்டணமான 499 ரூபாயை ஐ சி எம் ஆர் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள அன்சாரி நகரில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் உடனிருந்தார். இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 13 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்