Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனிமொழி, தமிழிசை சொத்து மதிப்பு எவ்வளவு

மார்ச் 27, 2019 11:17

சென்னை: திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தில், ரூ.21,16,57,370 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.8,92,20,200 மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகவும், வங்கிகளில் 1,92,90,928 ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தாய் ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.1,27,48,413 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
அதேபோல் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தில், ரூ.1,50,07,600 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.50 இலட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும், தனது கணவர் சவுந்திரராஜன் பெயரில் 2,11,50,000 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1,87,000 அளவிற்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்