Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

ஏப்ரல் 02, 2019 09:06

சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார்.இந்தியதலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்கள் அசோக் லாலவசா சுஷில் சந்ரா ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக சென்றுதேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

இன்று மாலை சென்னை வருகின்றனர்.மாவட்ட கலெக்டர்கள் எஸ்.பி.க்கள் கூட்டம் நடத்தி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். அதன்பின் தலைமைச் செயலர் டி.ஜி.பி.வருமான வரித்துறை கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய உள்ளனர். 

இதற்கிடையில் சென்னையில் நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.க்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அதில் வருமான வரித் துறை இயக்குனர் முரளிகுமார் போலீஸ் ஐ.ஜி.க்கள் சேஷசாயி ஜெயராமன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்