Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7.5% இட ஒதுக்கீட்டிற்கு தடை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு

டிசம்பர் 15, 2020 06:41


சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 3ஆவது முயற்சியாக தான் எழுதிய நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை எனவும், 200 மதிப்பெண்கள்கூட தாண்டாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்வழக்கில் ஜனவரி 5ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்