Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜாவுக்கு உடல்நலக் குறைவு

ஜனவரி 31, 2021 01:21

ஐதராபாத்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ஐதராபாத்தில் நடந்த கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு மேற்கொள்ளக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

டி.ராஜா, இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டி.ராஜாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டி.ராஜாவின் உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாகவே டி.ராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து டி.ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து டி.ராஜா டெல்லி திரும்புவார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்