Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிறந்த குழந்தையை கடித்து கொன்ற நாய் 

பிப்ரவரி 04, 2021 12:46

அமராவதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உன காதலா எனற கிராமம் உள்ளது. இங்கு அப்போது தான் பிறந்த பெண் குழந்தை ஒன்றை நாய் கவ்விக் கொண்டு ஓடி வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நாயை விரட்டிச் சென்றனர். உடனே நாய் குழந்தையை கீழே போட்டிவிட்டு ஓடி விட்டது. ஆனால் நாய் குழந்தையை கடித்து குதறி இருந்தது. இதனால் குழந்தை இறந்துவிட்டது.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சமூகநலத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். நாய் குழந்தையை எங்கிருந்து தூக்கி வந்தது என்பதை அறிவதற்காக அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடினார்கள்.

அப்போது காட்டுக்குள் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்ததற்கான அடையாளங்கள் இருந்தன. காட்டுப்பகுதியிலேயே குழந்தையை பிரசவித்து போட்டுவிட்டு சென்றுள்ளார். தவறான முறையில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் காட்டிலேயே குழந்தையை போட்டுவிட்டு சென்றுள்ளார். குழந்தையின் தாயை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்