Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட பிரதமர் மோடி 

மார்ச் 01, 2021 03:56

புதுடெல்லி:கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதுவரை 1 கோடியே 42 லட்சம் பேர் ஊசி போட்டுள்ளனர்.2-வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 2-வது கட்ட தடுப்பூசி போடும்பணி இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஊசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.நாடு முழுவதும் 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 10 ஆயிரத்து 687 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஊசி போடும் பணி இன்று தொடங்கியது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல் ஆளாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்சு நிவேதா ஊசி போட்டார். அவருக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்