Tuesday, 11th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பையொட்டி போலீசாருக்கு விடுமுறை இல்லை

மார்ச் 03, 2021 12:01

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி.திரிபாதி பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

 இதையொட்டி போலீசாருக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்