Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்தபடியே இருந்து வருகிறது. சமீபத்தில் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பின்னும் குறைந்ததால் நேற்று பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு வந்தது. இந்த நிலையில் தங்கம் விலையில் இன்றும் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33 ஆயிரத்து 448-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4 ஆயிரத்து 181 ஆக உள்ளது.தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.69 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80-க்கு விற்கிறது.