Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு 

மார்ச் 07, 2021 01:41

கிருஷ்ணகிரி : பெரியார் சிலைக்கு லாரி டயர் மூலம் மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு லாரி டயர் மூலம் நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் ஊத்தி தீ வைத்து விட்டு தம்பி சென்றுள்ளனர்.பின்னர் இதனைக் கண்ட அப்பகுதி மக்கள்  தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி பகுதி மக்கள் பெரியார் சிலை முன்பாக அமர்ந்து பெரியார் சிலையை தீ வைத்து எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெரியார் சிலையை அவமதிப்பு செய்யும் வகையில் தீ வைத்து எரித்து, சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் பொதுமக்கள்  கலைத்து சென்றனர்.

மேலும்  பெரியார் சிலைக்கு தீ வைத்தவர்களை  காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சமுத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தீ வைத்து எரித்து அவமதிப்பு செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்