Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுப்ரீம் கோர்ட்டை நாட எதிர்க்கட்சிகள் முடிவு

ஏப்ரல் 14, 2019 10:22

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சீட்டு ஒப்புகை இயந்திரங்கள் தொடர்பாக டில்லியில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி கூறுகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டது, தவறாகபயன்படுத்தப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளோம். 

ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டுகளை எண்ணினால், முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதிகாரிகளின் எண்ணிக்கையை கூட்டினால், முடிவு அறிவிக்க 5 நாட்கள் கூட ஆகாது. வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனால், சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர வேறு வழியில்லை. 

எந்த வித ஆய்வும் செய்யாமல் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறுகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவது இது முதல்முறை அல்ல. இந்த பிரச்னையை நாங்கள் பல நாட்களாக எழுப்பி வருகிறோம். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் கூட ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன. நெதர்லாந்தும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்