Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் தேர்தல் ரத்து இல்லை

ஏப்ரல் 16, 2019 06:01

புதுடில்லி : வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக மீடியாக்களில் செய்தி பரவியது.  

இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று (ஏப்.,16) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரன் கூறுகையில், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

வேலூர் லோக்சபா தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23 ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக - திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.ஷண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

தலைப்புச்செய்திகள்