Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்தியபிரதேசத்தில் கொரோனாவால் கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை

மே 10, 2021 07:17

இந்தூர்: மத்திய பிரதேசத்தில், கொரோனாவால் கணவர் இறந்த துக்கம் தாங்காமல், அடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தூர் அருகே டுகோகஞ்ச் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயதான ஆணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவரது மனைவி, இனி நமக்கு வாழ்க்கையில்லை என்று எண்ணி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். கணவரின் உடலை ஆஸ்பத்திரியில் எடுத்துச் செல்வதற்கு முன்பாகவே 9 மாடி கொண்ட ஆஸ்பத்திரியின், 5-வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்