Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூருவில் இளைஞர்கள் மிரட்டல்: கரோனா வைரஸ் பரப்புவதாக கூறி செவிலியரை தாக்கிய 3 பேர் கைது

மே 18, 2021 07:35

பெங்களூருவில் கரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பிய செவிலியரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு லட்சுமி புரத்தை சேர்ந்த செவிலியர் பிரியதர்ஷினி (20) நேற்று முன்தினம் கரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராம் (26), பிரபு(27), அர்ஜுன் (23) ஆகிய மூவரும்அவரை தெரு முனையிலே தடுத்து நிறுத்தி, “கரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை இங்கு வரக்கூடாது. மருத்துவமனையில் இருந்து கரோனா வைரஸை கொண்டு வந்து இங்கு பரப்பிவிடக் கூடக்கூடாது” என்று கூறி அவரைதகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இதை அறிந்த பிரியதர்ஷினியின் தந்தை ரமேஷ்குமார் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டித்தார்.

அப்போது 3 பேரும் ரமேஷ்குமாரையும், பிரியதர்ஷினியை யும் தாக்கியதுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்