Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் தீ விபத்து

மே 26, 2021 11:28

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் எச்பிசிஎல் தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத் தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்தின் மல்கா புரம் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் செயல் பட்டு வருகிறது. பெட்ரோல் சுத்தி கரிப்பு ஆலையாக செயல்பட்டு வரும் இங்கு, 3 ஷிப்ட்களில் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கரோனா நிபந்தனைகளின்படி 30 சதவீதம் பேர் மட்டுமே தற்போது இங்கு பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் பழைய டெர்மினல் பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்தது. இதையடுத்து, உடனடியாக சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால் ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். தொழிற்சாலைக்குள் 6 தொழிலா ளர்கள் முதலில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் மீட் கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்