Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லட்சத்தீவு விவகாரம்: தலையிடக்கோரி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

மே 27, 2021 09:21

புதுடெல்லி: லட்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமருக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவில் தீவின் சுற்றுச்சூழல் புனிதத்தன்மை தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி செயல்பட்டு வருகிறார். லட்சத் தீவின் நிர்வாகி தன்னிச்சையாக அறிவித்துள்ள விதிகள் மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இத்தகையை புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு உள்ளார்.  குறுகிய கால வணிக ரீதியிலான நலனுக்காக, மக்களின் வாழ்வாதார பாதுகாப்பு, போதுமான வளர்ச்சி ஆகியவை இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உள்ளது.

2 குழந்தைகளுக்கு மேலானவர்களை கொண்டவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவது என்பது போன்ற விதிகள் எல்லாம் ஜனநாயக விரோத செயல்பாடுகள். இந்த பிரச்சனையில் நீங்கள் உடனடியாக தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதருக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்