Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: அமைச்சர் பி.மூர்த்தி குற்றச்சாட்டு

ஆகஸ்டு 02, 2021 03:22

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார். மதுரை வண்டியூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பி.மூர்த்தி பெற்றார். பின்னர் வண்டியூரில் உள்ள கிளை நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா மூன்றாம் அலையைத் தடுக்க மதுரை மாவட்டத்தில் வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் அதிகமாகக் கூடுவார்கள். கரோனா நேரத்தில் பொதுமக்கள் நலன் கருதி கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதை விசாரிக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் சில சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்போது தவறு செய்யும் அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம் செய் யப்படுகின்றனர், சில அதிகாரி கள் பணியிடமாற்றம் செய்யப் படுகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்