Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆகஸ்டு 07, 2021 05:44

கோவை:கோவை ரத்தினபுரி அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் கண்ணன் என்கிற அப்துல் காதர். இவரது மகன் பவுசியா (வயது 15). இவர் கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளதால் பவுசியா ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்தார். இதற்காக அவரது பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். புவுசியா வீட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் செல்போனுடனேயே இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் புவுசியா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பவுசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்