Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைப்பாகை அணிபவர் எல்லாம் சர்தார் ஆக முடியாது - மோடி, கெஜ்ரிவால் குறித்து பிரியங்கா காந்தி பேட்டி

பிப்ரவரி 16, 2022 10:50

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். பின்னர் அமிர்தசரஸ் நகரில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் மேடையில் டர்பன் (தலைபாகை) அணிந்து இருப்பார்கள். மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்.

உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம்  (மோடி, கெஜ்ரிவால்) சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் சொல்லுங்கள். பஞ்சாப் பஞ்சாபியர்களுக்கு சொந்தமானது என்று அவர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களை சர்தார் ஆக்குவதில்லை. அவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து பிறந்தவர்கள்.

ஒருவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், மற்றவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். அவர்கள் இருவருமே ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, லக்கிம்பூர் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு(உத்தர பிரதேச அரசு) மேல்முறையீடு செய்ய வேண்டும். 

விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்று அரசு கூறுகிறது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் வழக்கை வலுவாக முன் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்