Wednesday, 12th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடிக்கு எதிரான மேலும் 2 புகார்களில் முகாந்திரம் இல்லை: தேர்தல் ஆணையம்

மே 07, 2019 05:06

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, மோடி வாக்களிக்க வரும் போது அகமதாபாத்தில் பேரணி நடத்தியதாகவும், அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறியதாக  குற்றம் சாட்டிய காங்கிரஸ், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. 

கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பாலாகோட் விமானப்படை தாக்குதல் கதாநாயகர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இது குறித்தும், தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது.

இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட 2 சம்பவங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.

இவை தவிர,  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான 2 புகார்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு புகார் மீதும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்