Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதைகளின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தால் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

மே 01, 2022 05:04

மடத்துக்குளம்: விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தெரியும் வகையில், விற்பனை உரிமம் மற்றும் தகவல் பலகையை வைத்து பராமரிக்க வேண்டும்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, விதை விற்பனை நிலையங்களிலும், கோடை கால பருவத்திற்கு உகந்த விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தெரியும் வகையில், விற்பனை உரிமம் மற்றும் தகவல் பலகையை வைத்து பராமரிக்க வேண்டும். 

விதை விற்பனை நிலையங்களில், விதைகளின் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, பதிவுச்சான்றிதழ் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை ஆகியவற்றை சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை விதை ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போதைய கோடை பருவ காலத்திற்கு ஏற்புடையதாக இல்லாத 10 விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதை விற்பனை மையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள விதைகளிலிருந்து, முளைப்புத்திறன் மற்றும்இனத்தூய்மை பரிசோதனைக்காக விதை ஆய்வாளரால் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பரிசோதனை முடிவில் விதைகளின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தால், விதைச்சட்டத்தின்கீழ் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்