Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோட்டக்கலைத்துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

மே 02, 2022 11:55

உடுமலை: பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளர்ப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. 

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மடத்துக்குளம் தாலுகா சங்கராமநல்லுார் தோட்டக்கலைப்பண்ணையில், சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது.

இதில், பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளர்ப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், பங்கேற்க விரும்புவோர்,

தோட்டக்கலைத்துறையின்,https://www.tnhorticulture.tn.gov.in/என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை, பதிவிறக்கம் செய்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 5வது தளத்திலுள்ள தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். 

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்