Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரத்து குறைவால் பருத்தி பஞ்சு விலை உயர்வு

மே 30, 2022 11:29

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பருத்தி விளைச்சல் இன்றி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால்,கடந்த மார்ச்சில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற பருத்தி பஞ்சு அதிகபட்சமாகஒரு கிலோ ரூ.104 வரை விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைத்தும் மகசூல் இன்றிவிவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு மழை காரணமாகஊரணிகளில் சீசனில் பருத்தி நன்றாக விளைந்தது. இதனால் வரத்து அதிகரித்து கடந்த மார்ச்சில் பஞ்சு ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை தரத்திற்கு ஏற்ப விலைபோனது.
தற்போது சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம் சந்தையில் பருத்தி பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.104 வரை விலைபோகிறது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு கோடை மழையின்றி பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்ல விலை கிடைத்தும் மகசூல்இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.


ராமநாதபுரம் கமிஷன் மண்டி வியாபாரிகள் கூறுகையில், 'இங்கு விற்கப்படும் பஞ்சு மொத்த வியாபாரிகள்மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பருத்தி சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பஞ்சு வரத்து குறைந்து விலை கூடியுள்ளது,' என்றார்.

தலைப்புச்செய்திகள்