Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை

மே 31, 2022 03:18

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு கூடுதலாக ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான நேர்முகத்தேர்வு நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.இதில் 152 பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுடன கலந்து கொண்டனர். அவர்களில் 77 மாற்றுத்திறனாளிகள் இயலாமையின் தன்மையாக 100 மதிப்பெண் பெற்று பாதுகாவலர் உதவித்தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 23 மாற்றுத்திறனாளிகள் இயலாமையின் தன்மையாக 90 மதிப்பெண் அதிக உதவி தொகை பெற பரிந்துரைக்கப்பட்டனர்.
75 மதிப்பெண் பெற்ற 15 மாற்றுத்திறனாளிகள் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்தி றனாளிகளுக்கான கூடுதல் உதவித் தொகைக்காக பரிந்துரைக் கப்பட்டனர் அவர்களுக்கான பரிந்துரை ஆணையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், அரசு எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தை நல மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்