Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்; தற்காலிக அதிபராக பிரதமர் ரணில் அறிவிப்பு

ஜுலை 13, 2022 08:30

இலங்கை: இலங்கையில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் தற்போதைய அரசின்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என மக்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர். 

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபாய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை ஊடகம் தெரிவித்தது.
 

தலைப்புச்செய்திகள்