Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணிசமான வருவாய் தரும் கோல்டன் சீதா

செப்டம்பர் 11, 2022 11:03

கோல்டன் சீதா பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.அரவிந்தன் கூறியதாவது:

மலை பிரதேசங்களில் விளையக்கூடிய சீதா பழங்களை பயிரிட முடிவு செய்து, கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்துள்ளேன்.இது, இரண்டு ஆண்டுகளுக்கு பின் மகசூல் தரக்கூடியது. நம் ஊரின் மணல் கலந்த சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இப்பழங்களை பொறுத்த வரை, ஆக., துவங்கும் காய் பிடிப்பு டிசம்பர் மாதம் தொடர்ந்து காய்க்கும்.

ஒரு ஏக்கரில் கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்தால், நான்கு மாதங்களில் 2 டன் காய்கள் வரை அறுவடை செய்யலாம். சந்தை நிலவரத்தை பொறுத்து, கிலோ 80 முதல், 120 ரூபாய் வரை விற்கலாம். சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தால், கோல்டன் சீதா பழத்தில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்