Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்...!

செப்டம்பர் 19, 2022 02:05


நாகை அருகே திருக்குவளை பகுதியில் பெய்த திடீர் கனமழையால் வலிவலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அவதி.


நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது முன் பட்டத்தில் குறுவை சாகுபடி காண அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பெய்த மழையால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


கொள்முதல் திறப்பினை எதிர்நோக்கி நெல் மூட்டைகளுடன் காத்திருந்த பெரும்பாலான விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.

குறிப்பாக வலிவலம் பகுதியில் திடீரென பெய்த மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர வைப்பதற்காக வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்தது. விவசாயிகள் தார்ப்பாய் கொண்டு தங்களது நெல்லை பாதுக்காக்க முயன்றும் மழை நீர் உட்புகுந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்