Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொங்கு பாலம் விபத்து பகுதியை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்

நவம்பர் 01, 2022 01:42

குஜராத்: மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் அமைந்துள்ளது. குஜராத் வருட பிறப்பிற்கு முன்பாக இதனை புதுபிக்கும் பணி நடைபெற்றது. கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதன்பின்னர், கடந்த 26-ம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது.குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிலையில், பாலத்தில் சில தினங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் அறுந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 142க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பலரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். அதில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

பிரதமர் தற்போது குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் அங்கு தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 142க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார். இதை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்