Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆண்டுக்கு பல லட்சம் இலாபம் தரும் ஃபிஸ்சி கல்சர்

நவம்பர் 16, 2022 06:00

மீன் பண்ணை:

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் அதிக இடர்பாடுகளின்றி அதிக செலவில்லாமல் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் போது கீழ்க்காணும் குறிப்புக்களை கவனத்தில் கொள்வது நல்லது.

மீன்குளங்களின் அமைப்பு:

மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பி லாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவை களாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறு வடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக் குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

மீன்குள உருவாக்கம்:

பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்டகுளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில், பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலி கமாக மாற்ற நினைத்தால், கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம், விவசாய நிலமாக மாற்றிவிடலாம்.

இயற்கை உரமிடல்:

குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.

மீன் கொல்லி:

இழுவலையால் அழிக்க இயலவில்லையெனில், மீன்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு, பிளீச்சிங் பவுடர், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, அவற் றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லி யின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே, குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே, மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.

மீன் குஞ்சுகள் வாங்குதல்: மீன் குஞ்சுகளை வாங்கும்போது, நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம், வெளிப்புற காயங்கள், செதில்கள் இழந்து இருத்தல், சுறுசுறுப்பின்மை, மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறி களுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும்.மீன் குஞ்சுகளை, மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை, முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது. வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கும் குஞ்சுகளை, உடனே குளங்களில் விடாமல், அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும். பின்னர் குஞ்சு களை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ, 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ, 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து, பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.


 

தலைப்புச்செய்திகள்