Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேச்சிப்பாறையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு

நவம்பர் 19, 2022 02:11

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறையில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை
இயக்குனர் டாக்டர். பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார். 

இந்த ஆய்வில் டாக்டர். பிருந்தாதேவி கூறியதாவது:- பண்ணை பகுதிகளில் நெகிழி குப்பைகள் இல்லா வண்ணம் அனைவரும்
பராமரிக்க வேண்டும். பண்ணையில் தாய் செடிகள் மற்றும் மரக்கன்று களை நட்டு தினமும் பராமரிக்க வேண்டும். இலவங்க பட்டை மரங்களை பராமரிக்க முன்னுரிமை கொடுத்து அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் பதப்படுத்தும் அலகினை பண்ணையிலும் விவசாயி களும் தொடர்ந்து பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) மு.வ சரண்யா, தோட்டக்கலை உதவி இயக் குநர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், அருண்குமார், நந்தினி மற்றும் தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்