Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊட்டியில் கடும் குளிரால் பொது மக்கள் அவதி

டிசம்பர் 05, 2022 04:02

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு விதவிதமா ன கால நிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஒரிரு தினங்களுக்கு முன்பு நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலுடன் கூடிய பனிமூட்டம் காணப்பட்டு வந்தது. இதன் காரணமாக பகல் நேரங்களில் கடும் வெயி லும் மாலை முதல் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்ட துவங்கி யது. இரவு முழுவதும் கடும் குளிர் நிலவியது. காலையிலும் குளிர் காணப்பட்டது. 

இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்வோர் அவதி அடை ந்தனர். குறிப்பாக விவசாய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள் ளாகினர். இதுதவிர சிலர் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்ந்த படி நின்று கொண்டிருந்தனர். மேலும் கம்பளி, சுவர்ட்டர் ஆடைகளை அணிந்து கொண்டு குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருந்தனர். கடும் குளிர் கார ணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்