Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் இலவச வேட்டி,  சேலைகள், நெல்லை வந்து சேர்ந்தன

டிசம்பர் 29, 2022 06:19

திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள, பொங்கல் இலவச வேட்டி,  சேலைகள், நெல்லை வந்து சேர்ந்தன!  பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

திருநெல்வேலி :- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டிகள் மற்றும் சேலைகள், தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு,  அடுத்த மாதம் (ஜனவரி- 2023)  9-ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும், 33 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக தமிழக அரசு மொத்தம் 243 கோடியே, 96 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்துள்ளது. வேட்டிகள் 15 டிசைன்களிலும், சேலைகள் 5 டிசைன்களிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இலவச  வேட்டி மற்றும் சேலைகளை பெறுவதற்கான டோக்கன்கள், அடுத்த மாதம் (ஜனவரி) 3-ஆம் தேதி முதல்  8-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும், விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள திருநெல்வேலி,  மானூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி,  திசையன்விளை, ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய, எட்டு  தாலுக்காக்களிலும் வழங்குவதற்கான வேட்டி, சேலைகள்,  ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ரெயில் மூலம்,  திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து அவை அனைத்தும், லாரிகள் மூலம்  திருநெல்வேலி கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள, பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு  அவை மழை,  வெயில் பாதிப்புக்கு உள்ளாதாகவாறு,  பத்திரமாக பாதுகாப்பாக,  இன்று (டிசம்பர்.29) அடுக்கி வைக்கப்பட்டன.

அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில்,  முறைப்படி இவை அனுப்பி வைக்கப்படும்! என,  வருவாய்த்துறை உயர் அலுவலர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்